மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Jan 2022 7:20 PM GMT (Updated: 25 Jan 2022 7:20 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 805 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு 248 பேர் பலியாகி உள்ளனர்.
பெரம்பலூர் ஒன்றியதில் 56 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 24 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 20 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 8 பேர் என பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 772 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 640 பேர் தனிமைப்படுத்தும் முகாம்கள் மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 132 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story