முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்களிடம் விசாரணை

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விருதுநகர்,
முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபு ராஜ் மற்றும் முத்து பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 4 பேரும் தலைமறைவான நிலையில் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து அவரது உதவியாளர்கள் பலராமன், பாபு ராஜ் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய 3 பேரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் பலராமன் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரிடமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரணை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story