தூக்குப்போட்டு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2022 2:36 AM IST (Updated: 26 Jan 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கே.புதூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதூர்,

மதுரை கே.புதூர் கணபதி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் கீர்த்திகா (வயது 18). இவர் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பியூட்டிசனாக படித்து வந்தார். இவருக்கு படிப்பில் நாட்டமில்லை என தெரிகிறது. இதனால் தனக்கு படிக்க விருப்பம் இல்லை என பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர்கள் கண்டித்து ஒழுங்காக படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்திகா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
1 More update

Next Story