ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா; மாவட்டத்தில் 83 போலீசாருக்கு பாதிப்பு


ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா; மாவட்டத்தில் 83 போலீசாருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 9:15 PM GMT (Updated: 25 Jan 2022 9:15 PM GMT)

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா 3-வது அலை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுனாமி வேகத்தில் பரவிய இந்த அலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். அந்த சமயத்திலும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தங்களது பணிகளில் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டனர். இதில் பலருக்கு தொற்று உறுதியானது.
இந்தநிலையில் தற்போது 3-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும், தினமும் இரவுநேர ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
7 போலீசார்
ஈரோடு மாவட்டத்தில் போலீசார் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தின் வாசலில் பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் கயிறு கட்டப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நுழைவு வாயில் பகுதியிலேயே பொதுமக்களிடம் இருந்து புகார்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 83 போலீசார் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story