காங்கிரசார் நூதன போராட்டம்


காங்கிரசார் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 2:22 PM GMT (Updated: 26 Jan 2022 2:22 PM GMT)

கோவில்பட்டியில் காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி, கூசாலிபட்டி, பெருமாள்பட்டி, காட்டுராமன்பட்டி, வள்ளிநாயகிபுரம், கடலையூர் உள்பட 12 கிராமங்கள் 30 கி.மீ தூரத்தில் உள்ள நாலாட்டின்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏதாவது குற்றச் செயல்கள் நடந்தால், அவர்கள் கோவில்பட்டியை கடந்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டும். இந்த கிராமங்கள் எட்டயபுரம் தாலுகா எல்லையில் அமைந் துள்ளதால், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதிலும் பின்னடைவு ஏற்படுவதாகவும், எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி 12 கிராமங்களை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துடன் இணைக்க வேண்டும் அல்லது கடலையூரில் தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால் நேற்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தார்.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காதததால் நேற்று செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது. இதில் வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கனி, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய் சாமி மற்றும் நிர்வாகிகள் தேங்காயை உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Next Story