ஓசூரில் திகவினர் ஆர்ப்பாட்டம்


ஓசூரில் திகவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:14 PM GMT (Updated: 26 Jan 2022 5:14 PM GMT)

ஓசூரில் திகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்:
குடியரசு தின அணிவகுப்பின்போது தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு அனுமதிக்காததை கண்டித்து தி.க. சார்பில் ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் மாவட்ட தி.க. தலைவர் வனவேந்தன் தலைமை தாங்கினார். இதில் தி.க. பொதுக்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள்  கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story