ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி


ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி
x
தினத்தந்தி 26 Jan 2022 5:23 PM GMT (Updated: 26 Jan 2022 5:23 PM GMT)

திண்டுக்கல்லில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.

திண்டுக்கல்: 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில், திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு சந்திப்பில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க மதுரை கோட்ட துணை தலைவர் வாஞ்சிநாதன் தேசியக்கொடியை ஏற்றினார். 

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார் ஆகியோர் போன்று முகமூடி அணிந்து வந்து இருந்தனர். அப்போது இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மேலும் டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story