10 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி


10 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி
x
தினத்தந்தி 26 Jan 2022 11:08 PM IST (Updated: 26 Jan 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி

கொள்ளிடம்:-

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் ஜின்னா தெருவிற்கான சாலை குண்டும், குழியுமாக இருந்து வந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதேபோல் கொள்ளிடம் அருகே உள்ள அனுமந்தபுரம் அம்பேத்கர்தெரு சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இந்த பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி மேற்கண்ட இடங்களில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி மேம்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
1 More update

Next Story