பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக வாழைத்தார் எடை முறையில் ஏலம் விடப்பட்டது. பொள்ளாச்சி சுற்று வட்டாரம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து வாழைத்தார்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தை அமாவாசை வருவதால் கடந்த வாரத்தை விட வாழைத்தார் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. மோரிஸ் ஒரு கிலோ ரூ.16-க்கும், பூவன்தார் ரூ.24-க்கும், நேந்திரம் ரூ.36-க்கும், செவ்வாழை ரூ.36-க்கும், கதலி ரூ.24-க்கும், ரஸ்தாலி ரூ.27-க்கும், ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story