குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 6:48 PM GMT (Updated: 26 Jan 2022 6:48 PM GMT)

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்த ஜாபர்கான் (வயது 26), ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த அப்சல்பாஷா (29) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்கா கடத்திய வழக்கில் பள்ளிகொண்டா போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார்.

 அதன்பேரில் ஜாபர்கான், அப்சல்பாஷா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் 2 பேரிடமும் போலீசார் வழங்கினர்.


Next Story