ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 7:33 PM GMT (Updated: 26 Jan 2022 7:33 PM GMT)

ராஜபாளையத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக  வாகன ஊர்வலம் புறக்கணிப்பை கண்டித்து ராஜபாளையத்தில்  தி.மு.க., தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக மாவட்ட தலைவர் திருப்பதி, ம.தி.மு.க. நகர செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரவி, தி.மு.க. மாணவரணி செயலாளர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சதுரகிரி, தமிழ்புலிகள் தொகுதி செயலாளர் தமிழரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story