மனைவியை தாக்கிய வாலிபர் கைது


மனைவியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 7:49 PM GMT (Updated: 26 Jan 2022 7:49 PM GMT)

விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள வடபகுதியில் இருந்தவர் முருகேஸ்வரி (வயது 24). இவரது கணவர் ராம்குமார் (26). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். முருகேஸ்வரி கோவையில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  ராம்குமார் வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த மற்ெறாரு பெண்ணை 2-வது  திருமணம் செய்து கொண்டு வடமலைக்குறிச்சியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமலைக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த முருகேஸ்வரியிடம், என் மீது போலீசில் ஏன் புகார் கொடுத்தாய்? என தகராறு செய்த ராம்குமார் அவரை தாக்கி படுகாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் ராம்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story