வ.உ.சி. கொள்ளு பேத்திக்கு கொரோனா


வ.உ.சி. கொள்ளு பேத்திக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Jan 2022 7:50 PM GMT (Updated: 26 Jan 2022 7:50 PM GMT)

வ.உ.சி. கொள்ளு பேத்தி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரை,

மதுரை சம்மட்டிப்புரம் பகுதியை சேர்ந்தவர் மேக்டலின்(வயது 45). சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேத்தியான இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. மேக்டலினுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில், உடல்நலக்குறைவால் அவதியடைந்த அவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர், கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். இதுகுறித்து, மேக்டலினை கவனித்து வருபவர்கள் கூறுகையில், "மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி மேக்டலினுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக, அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றனர்.


Next Story