கரூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல்


கரூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல்
x
தினத்தந்தி 26 Jan 2022 8:04 PM GMT (Updated: 26 Jan 2022 8:04 PM GMT)

கரூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டுப்போடுகிறார்கள்.

கரூர், 
தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 4-ந் தேதி மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஆகும். மறுநாள் 5-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், பிப்ரவரி 7-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுபவர்கள் பெறலாம். வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதியும் நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. வாக்காளர்கள் இறுதிப்பட்டியல், வாக்குச்சாவடி பட்டியல், பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு என நிறைவு பெற்றது. அடுத்த கட்டமாக அரசியல் கட்சியினரும் விருப்ப மனுக்கள் பெற்று நேர்காணலும் நடத்தப்பட்டு வருகிறது. இனி கூட்டணி கட்சியினருடன் கலந்தாலோசித்து வார்டுகள் ஒதுக்கீடு சம்பந்தமாக அறிவிப்பது மட்டுமே நிலுவையில் உள்ளது.
மாநகராட்சி வாக்காளர்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 6 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர். அதன்படி, கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 88 ஆயிரத்து 616 ஆண் வாக்காளர்களும், 97 ஆயிரத்து 486 பெண் வாக்காளர்களும், இதர 18 வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர்.
குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 10 ஆயிரத்து 655 ஆண் வாக்காளர்களும், 11 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர்.
பள்ளப்பட்டி, புகளூர் நகராட்சி
பள்ளப்பட்டி நகராட்சி 27 வார்டுகளில் 15 ஆயிரத்து 238 ஆண் வாக்காளர்களும், 15 ஆயிரத்து 994 பெண் வாக்காளர்களும், இதர ஒருவர் என மொத்தம் 31 ஆயிரத்து 233 வாக்காளர்கள் உள்ளனர்.
புகளூர் நகராட்சி 24 வார்டுகளில் 12 ஆயிரத்து 356 ஆண் வாக்காளர்களும், 13 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்களும், இதர ஒருவர் என மொத்தம் 26 ஆயிரத்து 154 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சிகள்
அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 5 ஆயிரத்து 254 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 839 பெண் வாக்காளர்களும் என 11 ஆயிரத்து 93 வாக்காளர்கள் உள்ளனா்.
புலியூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 608 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 939 பெண் வாக்காளர்களும் என 9 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்களும் என 9 ஆயிரத்து 42 வாக்காளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 296 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 495 பெண் வாக்காளர்களும் என 8 ஆயிரத்து 791 வாக்காளர்கள் உள்ளனர்.
மருதூர், நங்கவரம் பேரூராட்சிகள்
மருதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 4 ஆயிரத்து 386 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 728 பெண் வாக்காளர்கள் என 9 ஆயிரத்து 114 வாக்காளர்கள் உள்ளனர்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 3 ஆயிரத்து 12 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்களும், இதர ஒருவர் என 6 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர்.
நங்கவரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 6 ஆயிரத்து 775 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 396 பெண் வாக்காளர்களும், இதர ஒருவர் என 14 ஆயிரத்து 172 வாக்காளர்கள் உள்ளனர்.
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 3 ஆயிரத்து 744 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும் என 8 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர்.
406 வாக்குச்சாவடி மையங்கள் 
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 246 வார்டுகளில், 406 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 319 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 78 ஆயிரத்து 665 பெண் வாக்காளர்களும், இதர 22 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 6 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story