முதியவருக்கு கத்திக்குத்து


முதியவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 26 Jan 2022 8:23 PM GMT (Updated: 26 Jan 2022 8:23 PM GMT)

மதுரையில் முதியவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மதுரை, 

மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சோமசுந்தரம் வீட்டுக்குள் கார்த்திக் புகுந்து அவரை அவதூறாக பேசி கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story