குருவிகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; பெண் பலி

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே செவல்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பெரிய குருசாமி. இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 55). இவர்களுடைய மகன் கணேசமூர்த்தி (21). இவர் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிள்ளையார்நத்தத்தில் நடந்த கோவில் விழாவுக்கு தாயாருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
குருவிகுளம் அருகே கே.புதூர் கல்குவாரி அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசமூர்த்தியை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவரான கே.புதூரைச் சேர்ந்த கணேசனை (50) கைது செய்தார்.
Related Tags :
Next Story