காற்றாலையில் திருடிய 2 பேர் கைது


காற்றாலையில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2022 9:21 PM GMT (Updated: 26 Jan 2022 9:21 PM GMT)

காற்றாலையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை:
தேவர்குளம் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது சாக்குப்பைகளுடன் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், தேவர்குளத்தைச் சேர்ந்த டேனி குமார் (வயது 27), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜோசப் (25) என்பதும், அங்குள்ள காற்றாலை பண்ணைகளில் இரும்பு பொருட்கள், தாமிர ஒயர்களை திருடி சாக்குப்பைகளில் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story