ஈரோடு மாவட்டத்தில் 89 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; சுகாதார துறையினர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 89 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; சுகாதார துறையினர் தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2022 10:01 PM GMT (Updated: 26 Jan 2022 10:01 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 89 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார துறையினர் கூறியுள்ளனா்.

ஈரோடு
கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.
இதில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 14 ஆயிரத்து 956 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 89.27 சதவீதமாகும். இதைப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 12 லட்சத்து 7 ஆயிரத்து 202 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 66.73 சதவீதமாகும். முதல் மற்றும் 2 -ம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 28 லட்சத்து 22 ஆயிரத்து 158 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர். இதற்கிடையில் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 25 லட்சத்து 58 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Next Story