காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்யும் பொதுமக்கள்


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்யும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:11 AM GMT (Updated: 27 Jan 2022 9:11 AM GMT)

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்ததும் சிறிய வகை பைபர் படகுகளில் கடலில் வலம் வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார்ப்பு பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடை பாலம் உள்ளது. இங்கு காலை மாலை வெளிகளில் சுற்றுவட்டார பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ராயபுரம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் இப்பகுதிக்கு பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு வரும் பொதுமக்கள் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்ததும் சிறிய வகை பைபர் படகுகளில் கடலில் வலம் வருகின்றனர். அப்படகினில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றி கொண்டு படகு சவாரியும் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் படகு சவாரி செய்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

இப்படி ஆபத்தை உணராமல் சட்ட விரோதமாக படகுகளில் சவாரி செய்வதை தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story