தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.42½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
குடியரசு தின விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தினவிழா செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசியகொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுடன் போலீஸ் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கம் 22 நபர்களுக்கும், நற்சான்று விருது 245 நபர்களுக்கும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 2022-2023 ஆண்டுக்கான மகிழ் கணிதம் கேடயம் மற்றும் சான்று 9 நபர்களுக்கும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறந்த ஆஸ்பத்திரிக்கான நற்சான்று 2 ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக ஆதரவற்ற விதவை சான்று 3 நபர்களுக்கும், சாலைவிபத்தால் மரணம் அடைந்தவர்கள் 5 நபர்களுக்கு ரூ.5, லட்சமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு ரூ.60 ஆயிரம் நிதியுதவியும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணையும், ரூ.24 ஆயிரத்து 355 மதிப்பில் 5 நபர்களுக்கு இலவச சலவை பெட்டியும் வழங்கப்பட்டது.
தாலிக்கு தங்கம்
மேலும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 3 உற்பத்தியாளர் குழு தொடங்க ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும், சமுதாய திறன் பள்ளிக்கு இருசக்கர வாகன பழுது பார்த்தல் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், சமுதாய பண்ணை பள்ளியில் காய்கறி சாகுபடிக்காக ஒரு நபருக்கு ரூ.69 ஆயிரத்து 400-ம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 998 மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், செயற்கை கை ஒரு நபருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பிலும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு தாலிக்கு தங்கம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 830 மதிப்பிட்டிலும், தாட்கோ மூலம் 2 தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும், வேளாண்மைத்துறை சார்பில் அட்மா தென்னை மரம் ஏறும் கருவி ஒரு நபருக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பிலும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (பயிறு) விசைத்தெளிப்பு கருவி ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலும், பிரதம மந்திரி விவசாய நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மழைத்தூவான் ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரங்கள் 5 நபருக்கு ரூ.8 லட்சத்து 98 ஆயிரத்து 668 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி, கொய்யா, டிராகன் பழச்செடிகள் என 3 நபர்களுக்கு ரூ.27 ஆயிரத்து 918-ம் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 669 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆதார்ஸ் பச்சேரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள் அறிவுடைநம்பி, சாகிதா பர்வீன், சரஸ்வதி, முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மேரி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story