சப்-கலெக்டர் திடீர் ஆய்வு


சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Jan 2022 1:17 PM GMT (Updated: 27 Jan 2022 1:17 PM GMT)

குஞ்சப்பனை கிராமத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடங்கள் உறுதியாக உள்ளதா?, தரமான உணவு வழங்கப்படுகிறதா?, மாணவ-மாணவிகள் கல்வித்தரம் குறித்து குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடிய அவர், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர்களுக்கு விரைவில் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.


Next Story