தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Jan 2022 5:13 PM GMT (Updated: 27 Jan 2022 5:13 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

குப்பைகள் அகற்றப்பட்டது
 ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குறும்பனை-ஆலஞ்சி சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசியதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பயன்பாட்டுக்கு வருமா?
பூதப்பாண்டி வடக்குத்தெரு மந்தைகோவில் பகுதியில் அரசுக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தை யாரும் உபயோகப்படுத்தாததால் பராமரிப்பின்றி சிதலமடையும் நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை பராமரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையம், அரசு அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                               -எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி. 
சாலையை சீரமைக்க வேண்டும்
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பியந்தரை-நீர்வக்குழி, தெற்கு பிடாகை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.                         
 -சுரேஷ், தெற்கு பிடாகை, பாலப்பள்ளம்.
சுகாதார சீர்கேடு
சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து தினமும் ஏராளமான கனரக வாகனங்களில் மீன்களை ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் வழியாக வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலைகளில் வடிந்து கொண்டே இருக்கிறது. நகர் பகுதியில் கடைவீதிகள் வழியாக செல்லும் போது கழிவுநீர் சாலைகளில் வடிவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, மீன் வாகனங்களில் இருந்து கழிவுநீர் வடிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                             -ராசிக், கோட்டார். 
குளத்தை தூர்வார வேண்டும்
குளச்சலில் இருந்து திக்கணங்கோடு செல்லும் சாலையில் பத்தறை கிராமத்தில் வெள்ளியாகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே. அபிஷேக், பாலப்பள்ளம். 
மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
மேலச்சூரங்குடி பகுதியில் சிவசுடலை 2-ம் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தின் அடியில் சிெமண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இ்தனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
        -ஆல்வின், மேலச்சூரங்குடி.

Next Story