பஸ்சில் திருடிய பெண் கைது


பஸ்சில் திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 11:01 PM IST (Updated: 27 Jan 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர், 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, மணவிளங் கரையைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மீனாள் (வயது45). இவர் திருமயத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் வந்தபோது தனது பையில் இருந்த மணி பர்சை காணவில்லை. இதனையடுத்து மீனாள் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசார ணையில் திருச்சி மாவட்டம் பழைய சமயபுரம் மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவிதா (28) என்பவர் திருடிய மணி பர்சை வைத்து இருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து, அவரிடம் இருந்த மணி பர்சையும்,  ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருப்பத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து கவிதாவை கைது செய்தார்.
1 More update

Related Tags :
Next Story