அன்னவாசல் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் குவித்து வைப்பு விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு


அன்னவாசல் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் குவித்து வைப்பு  விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2022 6:14 PM GMT (Updated: 27 Jan 2022 6:14 PM GMT)

அன்னவாசல் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகளை குவித்து வைத்துள்ளனர். அவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அன்னவாசல்:
நெல் கொள்முதல் நிலையம்
 அன்னவாசல் அருகே பரம்பூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை விற்பனை செய்ய வேண்டும். இந்த நிலையில் பரம்பூர் அருகே உள்ள கிளிக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்த பின்னரே விற்க முடியும்.
 இதையடுத்து கிளிக்குடி பகுதி விவசாயிகள் கடந்த 10 நாட்களாக ஆன்லைனில் நெல்களை விற்பனை செய்வதற்கு பதிவு செய்தும் விற்பனைக்கான அனுமதி கிடைக்காததால் நெல்லை குவித்து வைத்துக்கொண்டு விற்பனை செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். 
விற்பனை செய்ய முடியவில்லை 
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நெல்களை முன்பெல்லாம் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தோம். நாளடைவில் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் சுலபமான முறையில் விற்பனை செய்தோம். தற்சமயம் ஆன்லைன் பதிவு என்பதால் சரியான நேரத்திற்கு நெல்களை விற்பனை செய்ய முடியவில்லை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்து 10 நாட்களாக அனுமதி கிடைக்காததால் நெல்லைகுவித்து வைத்துள்ளோம். மேலும் விவசாயிகளிடம் பழைய முறையிலேயே நெல்களை பெற வேண்டும் என்றார்.

Next Story