நிலத்தகராறில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு


நிலத்தகராறில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jan 2022 7:17 PM GMT (Updated: 27 Jan 2022 7:17 PM GMT)

நிலத்தகராறில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தோகைமலை, 
கடவூர் தாலுகா வெள்ளாளப்பட்டி ஊராட்சி கணக்கப்பிள்ளையூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை அருகே உள்ள பென்னிபட்டியை சேர்ந்த வசந்தா என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமான வழக்கு குளித்தலை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் துரைசாமி தனது நிலத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த வசந்தாவின் தரப்பை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் உழவு செய்ய வந்துள்ளார். இதற்கு துரைசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டியப்பன், வசந்தா, மல்லிகா, முருகேசன் ஆகியோர் முதியவர் துரைசாமியை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் துரைசாமி அளித்த புகாரின் பேரில் ஆண்டியப்பன், வசந்தா, மல்லிகா, முருகேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story