வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 27 Jan 2022 7:45 PM GMT (Updated: 27 Jan 2022 7:45 PM GMT)

கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரியலூர்:
இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அரியலூர் மாவட்டம், மேலணிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயபிரகாசை (வயது 24) மீன்சுருட்டி போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேலும் வெளியே இருந்தால் போதை பொருள் விற்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால், ஜெயபிரகாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கலெக்டர் ரமணசரஸ்வதி குண்டர் சட்டத்தில் ஜெயபிரகாசை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஜெயபிரகாஷ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story