கொரோனாவுக்கு 3 பேர் சாவு

மதுரையில் நேற்று புதிதாக 582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதிதாக 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதிதாக 3 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுபோல் உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 53 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மதுரையிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பாதிப்புக்கள் அதிகமாகி வருகிறது. நேற்று மதுரையில் ஒரே நாளில் 582 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. 6 ஆயிரத்து 450 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் இத்தனை பேருக்கு பாதிப்புகள் உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் மதுரையில் இதுவரை மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 706 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதனுடன் சேர்த்து மொத்தமாக 81 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
3 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகாமல் இருந்த நிலையில், ஒரே நாளில் கொரோனா பாதிப்புடன் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதன்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் மற்றும் 76 வயதுடைய மூதாட்டி ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது ஆணும் உயிரிழந்தார். இவர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்புடன் வேறு சில இணை நோய்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story