மாவட்ட செய்திகள்

முன்னதாக பணிக்கு வர சொன்னதால்100 நாள் வேலை திட்டதொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்;பவானிசாகர் அருகே பரபரப்பு + "||" + Road block

முன்னதாக பணிக்கு வர சொன்னதால்100 நாள் வேலை திட்டதொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்;பவானிசாகர் அருகே பரபரப்பு

முன்னதாக பணிக்கு வர சொன்னதால்100 நாள் வேலை திட்டதொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்;பவானிசாகர் அருகே பரபரப்பு
பவானிசாகா் அருகே முன்னதாக பணிக்கு வர சொன்னதால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே உள்ளது கொத்தமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காலை 9 மணிக்கு வேலைக்கு வருவது வழக்கம். 
இந்த நிலையில் ½ மணி நேரம் முன்னதாக காலை 8.30 மணிக்கு வேலைக்கு வரவேண்டும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று காலை 10.20 மணி அளவில் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளியம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி அறிந்ததும் ஒன்றிய 100 வேலை நாள் திட்ட அதிகாரி கதிரேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 
அப்போது தொழிலாளர்களிடம் அவர் கூறுகையில், ‘இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் தங்களுடைய மறியல் போராட்டத்தை கைவிட்டு 10.40 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சாலை மறியல்
திருச்சுழி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
3. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்
திருக்கோவிலூரில் பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரிக்க வலியுறுத்தி உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்
வீ சித்தாமூர் கிராமத்தில் 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு