42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது


42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 9:26 PM GMT (Updated: 27 Jan 2022 9:26 PM GMT)

வாடிப்பட்டி அருகே 42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டுகள் பாண்டி, தனசேகரன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செம்மினிபட்டி செல்லும் சாலையில் தேசிய நான்கு வழி சாலை பாலத்தின் கீழ் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் குருவிதுறையை சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் கணேசன் (வயது 38) என்றும் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறியவர்பின் வாடிப்பட்டி அன்னை தெரசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.அதை தொடர்ந்து அவரிடம் இருந்து 42 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.இதையடுத்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story