திருவல்லிக்கேணியில் எட்டாம்படை முருகன் கோவில் கும்பாபிஷேகம்


திருவல்லிக்கேணியில் எட்டாம்படை முருகன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 28 Jan 2022 10:41 AM GMT (Updated: 28 Jan 2022 10:41 AM GMT)

திருவல்லிக்கேணியில் எட்டாம்படை முருகன் கோவில் கும்பாபிஷேகம் விழாவை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் முன்னிலையில் ஆலய நிர்வாகி கே.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்-அவுஸ் இருசப்ப தெருவில் எட்டாம்படை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, நவகிரக சாந்தி ஹோமம், கும்ப அலங்காரம், யாக சால பூஜைகள் நடைபெற்றது.

நேற்று 4-ம் கால யாக பூஜையும், கடம் புறப்பாடும், அதன் பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும், அதைதொடர்ந்து மூலவர் முருகனுக்கும் மகா கும்பாபிஷேகம், மகாஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

மாலையில் திருக்கல்யாண விழாவும், இரவு சாமி புறப்பாடும் நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் முன்னிலையில் ஆலய நிர்வாகி கே.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.


Next Story