நெல்கொள்முதல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகை


நெல்கொள்முதல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jan 2022 3:26 PM GMT (Updated: 28 Jan 2022 3:26 PM GMT)

நெல்கொள்முதல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.

மானாமதுரை, 
மானாமதுரை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. மேலும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் நெல் அறுவடை வரை நடந்து வருகின்றன. இந்த நிலையில் அரசகுளத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கு அனைத்து பொருட்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் இருந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, அரசகுளம் ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அரசகுளத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படவிடாமல் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தடுத்து வருவதாக நெல் கொள்முதல் நிலையம் முன்பாக திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மண்டல மேலாளர்சாந்தி, கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக செயல்பட நட வடிக்கை எடுத்தனர். எந்த அரசியல் கட்சியினரும் வரக் கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story