நெகமம் பேரூராட்சியில் சுவர் விளம்பரம் அகற்றம்


நெகமம் பேரூராட்சியில் சுவர் விளம்பரம் அகற்றம்
x
தினத்தந்தி 28 Jan 2022 9:05 PM IST (Updated: 28 Jan 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் பேரூராட்சியில் சுவர் விளம்பரம் அகற்றம்

நெகமம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதற்கிடையில் நெகமம் பேரூராட்சி பகுதியில் சுவர்களில் அரசியல் கட்சிகள் சார்பில் எழுதப்பட்டவைகளை பேரூராட்சி பணியாளர்கள் பெயிண்டு அடித்து அளித்தனர். மேலும் அங்கு அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகளை பேரூராட்சி ஊழியர்கள் சாக்கு மற்றும் துணியால் மூடி மறைத்தனர். தாராபுரம் ரோடு, புதிய பஸ் நிலையம், திருப்பூர்-பொள்ளாச்சி ரோடு, நாகர் மைதானம், தளி ரோடு ஆகிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது. இதையடுத்து வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சி தொடர்பாக வைத்திருந்த விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. பழைய காவல் நிலையம் எதிரே உள்ள மயான பகுதி சுவற்றில் அரசியல் கட்சியினர் எழுதி இருந்த சுவர் விளம்பரங்களை பெயிண்டு அடித்து அழித்தனர்.
1 More update

Next Story