பெரியபாளையம் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு


பெரியபாளையம் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 3:59 PM GMT (Updated: 28 Jan 2022 3:59 PM GMT)

பெரியபாளையம் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டது குறித்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எம். எந்திரம் உடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைப்பேர் சாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பகுதியில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 24-ந் தேதியன்று ஏ.டி.எம். மில் பணம் வைப்பதற்காக வங்கி ஊழியர்கள் சென்றனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளருக்கு தகவல் அளித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர், கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தார்.

வலைவீச்சு

அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story