சுங்கச்சாவடியில் சிக்கிய அரசு பஸ்


சுங்கச்சாவடியில் சிக்கிய அரசு பஸ்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:04 PM GMT (Updated: 28 Jan 2022 4:04 PM GMT)

வீரபாண்டி அருகே சுங்கச்சாவடியில் குறுகலான நுழைவு வாயிலில் செல்ல முடியாமல் அரசு பஸ் சிக்கிக்்கொண்டது.

உப்புக்கோட்டை:
தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வீரபாண்டி அருகே புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்காக சுங்கச்சாவடி அமைக்கும் இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் நேற்று அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று, சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயில் வழியாக சென்றது. அப்போது அந்த நுழைவு வாயில் மிகவும் குறுகலாக இருந்ததால் அரசு பஸ் வெளியே செல்ல முடியாமல், பின்னால் செல்ல முடியாமலும் சிக்கிக்கொண்டது. 
இதனால் பஸ் டிரைவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி நுழைவு வாயில் பகுதியை கடக்க செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story