அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2022 10:07 PM IST (Updated: 28 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தக்கோரி நாகையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
நாகை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யூ. அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கமாரி, சம்மேளன குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணிமனை துணைத்தலைவர் பஞ்சநாதன், பணிமனை பொருளாளர் ஐயப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர்கள் சீனி மணி, தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் மணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  முடிவில் பணிமனை செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.
1 More update

Next Story