ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாங்க கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு


ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாங்க கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 5:20 PM GMT (Updated: 28 Jan 2022 5:20 PM GMT)

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாங்க கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாங்க கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அடுத்த  மாதம் 19-ந்தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. 1,13,292 ஆண்கள், 1,08,109 பெண்கள் மற்றும் 93 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,21,494 வாக்காளர்கள் உள்ளனர். 
இந்த தேர்தலை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் மற்றும் மேலாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரபாகர், கண்காணிப்பாளர் சரவணன், இளநிலை பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில், வேட்புமனு வினியோகம் மற்றும் மனுதாக்கல் செய்யும் பணிக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
 ஒவ்வொரு அறையிலும் தலா 9 வார்டுகளுக்கான மனு வழங்குதல், மனுக்கள் பெறுதல் ஆகிய பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அலுவலர்கள் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மனுக்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ் வாங்கி செல்லவும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்பும் சுயேட்சையாளர்கள் குவிந்தனர். இதனால், மாநகராட்சி அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், வேட்புமனு தாக்கலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story