குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 593 ஆக குறைந்தது


குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 593 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 28 Jan 2022 5:33 PM GMT (Updated: 28 Jan 2022 5:33 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 593 ஆக குறைந்தது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 593 ஆக குறைந்தது. 
593 ஆக குறைந்தது
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாளைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மள... மள...வென உயர்ந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் பாதிப்பு எண்ணிக்கை 1500-வரை உயர்ந்தது. இந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
அதாவது நேற்று முன்தினம் 4,467 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 593 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 4 பேரும், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும், கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேரும் என 10 பேரைத்தவிர குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 583 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.. இவர்களில் ஆண்கள் 284 பேரும், பெண்கள் 276 பேரும், சிறுவர்கள் 19 பேரும், சிறுமிகள் 14 பேரும் அடங்குவர்.
76,386 பேர் பாதிப்பு
அகஸ்தீஸ்வரம் பகுதியில் 61 பேரும், கிள்ளியூர் பகுதியில் 29 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 64 பேரும், மேல்புறம் பகுதியில் 82 பேரும், முன்சிறை பகுதியில் 13 பேரும், நாகர்கோவில் நகரில் 131 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 47 பேரும், திருவட்டார் பகுதியில் 64 பேரும், தோவாளை பகுதியில் 48 பேரும், தக்கலை பகுதியில் 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 76,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story