வலங்கைமானில் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைப்பு


வலங்கைமானில் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 11:35 PM IST (Updated: 28 Jan 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வலங்கைமானில் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வலங்கைமான்;
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வலங்கைமானில் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் க்கப்பட்டது.
சீல் வைப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள்உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரமுகர்களின் வேட்புமனுக்கள் பெறுவதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
நேற்று வேட்புமனு தொடக்க நாளில் ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யப்படவில்லை.  மேலும் தேர்தல் நடத்தை விதிமுறையை அமல்படுத்துவதில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் நேற்று பூட்டிசீல் வைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள்
 மேலும் அரசு அலுவலகங்கள் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள், சுவர் விளம்பரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு வருகிறது. மேலும் விருப்பாச்சிபுரம், தொழுவூர், ஆதிச்ச மங்கலம், கும்பகோணம் ரோட்டில் உள்ள குடமுருட்டி ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகள் பறக்கும் படையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இது தவிர முக்கியமான இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.
1 More update

Next Story