வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது49), கூலி தொழிலாளி. இவரது உறவினர் ஒருவர் இறந்து 41- வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 11.30 மணியளவில் வீட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்துவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. மாலை 3.30 மணியளவில் சிவக்குமாரின் வீடு தீப்பிடித்து எரிவதை பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே, சிவகுமார் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.
அதற்குள் வீட்டின் ஓலை மேற்கூரை மேலும் வீட்டில் இருந்த ஜாதி சான்று, பிறப்பு சான்று, ஆதார் அட்டை, மிக்சி , கிரைண்டர், துணிமணிகள் மற்றும் பணம் போன்றவை எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவக்குமார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story