கடையில் பட்டாசு தயாரித்த 2 பேர் கைது


கடையில் பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2022 7:42 PM GMT (Updated: 2022-01-29T01:12:06+05:30)

சாத்தூர் அருகே கடையில் பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசு தயார் செய்யப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தூர் நகர் போலீசார் சோதனை செய்தபோது அங்கு அதே பகுதியை சேர்ந்த காளிச்சாமி (வயது 57), பேராபட்டியை சேர்ந்த தங்கராஜ் (62) ஆகிய இருவரும் பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை  தயாரித்த அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் கடையில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். 

Next Story