டிரைவர் அடித்துக் கொலையா?


டிரைவர் அடித்துக் கொலையா?
x
தினத்தந்தி 28 Jan 2022 7:47 PM GMT (Updated: 28 Jan 2022 7:47 PM GMT)

சிவகாசியில் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி, 
சிவகாசியில் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
டிரைவர் 
சிவகாசி ரிசர்வ்லைன் விஸ்வம் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). டிரைவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது அவரை தேடி 2 பேர் கருப்பசாமியின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் அவர் இல்லாததால் அவரது மனைவி பாண்டிசெல்வியிடம், கருப்பசாமி குறித்து விசாரித்து விட்டு சென்றுள்ளனர். 
இந்த நிலையில் இரவில், மனைவி பாண்டிசெல்விக்கு போன் செய்த கருப்பசாமி, தன்னை ஒருவர் தாக்கியதாகவும், தனது நெஞ்சு வலிப்பதாகவும், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் அருகில் இருப்பதாகவும் கூறி தன்னை அழைத்து செல்ல வலியுறுத்தி உள்ளார். உடனே பாண்டிசெல்வி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்ற போது கருப்பசாமி அங்கு இல்லை. 
அடித்துக்ெகாலையா?
இதற்கிடையில் இரவு ஒருவர் தனது ஆட்டோவில் கருப்பசாமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கருப்பசாமி பேச்சு, மூச்சு இன்றி கிடந்ததாக கூறப்படுகிறது. கருப்பசாமியை பார்த்து பாண்டிசெல்வி அழுதபோது அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கருப்பசாமியை பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்துள்ளது. 
உடனே அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாண்டிசெல்வி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் கருப்பசாமி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது இதில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் டிரைவர் கருப்பசாமி இறப்பு குறித்த உண்மை நிலையும், அதில் தொடர்பு உள்ளவர்கள் குறித்தும் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story