பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து


பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 28 Jan 2022 10:21 PM GMT (Updated: 28 Jan 2022 10:21 PM GMT)

பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

நெல்லை:
நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் சைமன் (வயது 49). இவர் டவுன் பாறையடி அருகே நயினார்குளம் வடக்கு பகுதியில் வாடகைக்கு குடோன் எடுத்து பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சைமன் வழக்கம்போல் கடையில் இருந்தார். அப்போது திடீரென குடோன் பின்பகுதியில் கரும்புகை வெளியாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சைமன், இதுகுறித்து பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். ஆனாலும் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகள் தீயில் கருகி நாசம் ஆயின. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story