தேர்தல் ஆலோசனை கூட்டம்


தேர்தல் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2022 1:32 PM GMT (Updated: 29 Jan 2022 1:32 PM GMT)

இளையான்குடியில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இளையான்குடி, 
இளையான்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நகர் தலைவர் சின்ஜான் காதர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இளை யான்குடி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப் பட்டன. வெற்றிபெறும் வார்டுகளை கண்டறிந்து வேட் பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் நகர் துணை தலைவர் முகமது அசாருதீன், அமைப்பு செயலாளர் முகம்மது ஹாலித், மாவட்ட பொரு ளாளர் செய்து காசிம். நகர் பொருளாளர் சுல்தான் அலா வுதீன், சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சிவகங்கை மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி, நகர் தலைவர் முகம்மது சமீம், தொழிற்சங்க தலைவர் அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக நகர் துணைத் தலைவர் முகமது அசாருதீன் நன்றி கூறினார்.

Next Story