4 பேரூராட்சிகளை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைக்குமா
4 பேரூராட்சிகளை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைக்குமா24 பேரூராட்சிகளை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைக்குமா
கோவை
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 36 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. 24 இடங்களையும், தி.மு.க. 5 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதன் விவரம் வருமாறு:-
அ.தி.மு.க.
தென்கரை, பூலுவப்பட்டி, காரமடை, ெபரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, வீரபாண்டி, மதுக்கரை, வெள்ளலூர், பேரூர், ஒத்தக்கால் மண்டபம், எட்டிமடை, வேடப்பட்டி, செட்டிப்பாளையம், திருமலையாம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இருகூர், மோப்பிரிபாளையம், நெகமம், ஜமீன்ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, உடையகுளம், கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி ஆகிய 24 பேரூராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது.
தி.மு.க.- காங்கிரஸ்
தி.மு.க. தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம், தாளியூர், சூலூர், கிணத்துக்கடவு ஆகிய 5 பேரூராட்சிகளை மட்டுமே பிடித்தது.
காங்கிரஸ் ஆலாந்துறை பேரூராட்சியை மட்டுமே கைப்பற்றியது.
சுயேச்சை
அன்னூர், இடிகரை, க.கூடலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சமத்தூர் ஆகிய 6 இடங்களை சுயேச்சைகள் பிடித்தனர்.
தற்போதைய நிலவரம்
தற்போது கருமத்தம்பட்டி, காரமடை, மதுக்கரை, க.கூடலூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முன்பு பெரும்பாலான பேரூராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது தி.மு.க. ஆளும் கட்சியாகவும், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் இருந்து கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் பேரூராட்சி தேர்தலை சந்திக்கிறது.
எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேதான் இருமுனைபோட்டி உள்ளது.
வேட்புமனுதாக்கல் தொடங்கி உள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்க உள்ளது. இழந்த இடங்களை தி.மு.க. பிடிக்கவும், கடந்த தேர்தலில் கைப்பற்றிய 24 இடங்களை இழக்காமல் அ.தி.மு.க. கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.
Related Tags :
Next Story






