17 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


17 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 Jan 2022 3:59 PM GMT (Updated: 29 Jan 2022 3:59 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 20-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்ட முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16- தேதி முதல் தற்போது வரை மொத்தம் 17 லட்சத்து 11ஆயிரத்து 33 பேருக்கு தடுப் பூசிகள் செலுத்தப்பட்டுஉள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10,12,226 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. 
இது தவிர பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 3,334 பேருக்கு செலுத் தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக நேற்று 700 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. 
முகாம்கள்
இதில் 86 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 614 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண், முதலியவற்றுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story