திருப்பூர் பகுதியில் கட்சிகளின் கொடிகள், சின்னம், துண்டு, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் பணி


திருப்பூர் பகுதியில் கட்சிகளின் கொடிகள், சின்னம், துண்டு, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் பணி
x

திருப்பூர் பகுதியில் கட்சிகளின் கொடிகள், சின்னம், துண்டு, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் பணி

திருப்பூர் பகுதியில் கட்சிகளின் கொடிகள், சின்னம், துண்டு, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டாலர் சிட்டி திருப்பூர்
டாலர் சிட்டி என பெயர் பெற்ற திருப்பூர் மாநகரில் பின்னலாடை தயாரிப்பு தொழில் பிரசித்தம். பல கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாைட தொழில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கு பின்னலாடை தொழில் மட்டுமின்றி அதனை சார்ந்த உப தொழில்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகிற பிப்ரவரி 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் பகுதியில் கட்சிகளின் கொடிகள், சின்னம், துண்டு, தொப்பி, பேட்ஜ்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு முழு வீச்சில் தொடங்கியுள்ளது. திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் இந்த பணிகளை தொடங்கியுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியினர் ஆர்டர்கள் கொடுக்க திருப்பூருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தேர்தல் நாள் மிக குறைவு
இது குறித்து நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் ஆர்டர்களின் வரத்து தற்போது வரத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் ஆர்டர்கள் அதிக அளவில் வரும் என எதிர்பாா்க்கப்படுகிறது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மூலப் பொருட்களின் விலை உயர்வால் வேறு வழியின்றி பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்திய அளவில் பிற பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு நிர்ணயிக்கிறதோ அதேபோலத்தான் திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில் எவ்வாறு நடைபெறுகிறதோ அதைப்பொறுத்தே இங்கு பிற தொழில்கள், விலைவாசி ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது.
10 சதவீதம் விலை உயர்வு
தற்போது நூல், பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் பின்னலாடை தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக கட்சிகளின் கொடி உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு தொழிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. வேறு வழியின்றி நாங்களும் மேற்கண்ட பொருட்களுக்கு 10 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளோம்.
எங்கள் நிலையை புரிந்து கொண்டு கட்சியினரும், வாடிக்கையாளர்களும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். மிகக்குறுகிய காலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆர்டர்களின் வருகையும் வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என நினைக்கிறோம். இருப்பினும் தயாரிப்பு பணிகளை முழு நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளோம் என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ள நிலையில், அதற்கு தொழில் நகரான திருப்பூரும் சளைத்ததல்ல என்னும் வகையில் இங்கு கட்சிகளின் கொடி உள்ளிட்டவைகள் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மக்கள் உழைப்புக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதுவும் இதன் மூலம் நிரூபணமாகிறது.

Next Story