உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும்


உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:30 PM GMT (Updated: 29 Jan 2022 4:30 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

வெளிப்பாளையம்:
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். இதில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகள், 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் போட்டியிட உள்ள 60 வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
100 சதவீதம் வெற்றி பெறும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி நாகை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 பேரூராட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகை நகராட்சி வளர்ச்சி பணிக்காக முதல்-அமைச்சர் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். 
கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் வேளாண் கல்லூரியும், வேதாரண்யம் தொகுதியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் என பல புதிய திட்டங்களை நாகை மாவட்டத்திற்கு தந்துள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருவதால் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உலக சாதனையாக அமையும்.  இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், இளஞ்செழியன், தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், நகர செயலாளர்கள் போலீஸ் பன்னீர், செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், தாமஸ் ஆல்வா எடிசன், ராஜேந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story