மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காவலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காவலாளி பலி
x
தினத்தந்தி 29 Jan 2022 4:39 PM GMT (Updated: 29 Jan 2022 4:39 PM GMT)

நாகூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் காவலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகூர்:
நாகூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் காவலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
பனங்குடி சமத்துவபுரம் அல்லி வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே நாகையில் இருந்து மேலவாஞ்சூரை நோக்கி நாகை திருமேனி செட்டி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மனோகரன் (28) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மனோகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story