ரூ20 லட்சத்தை மேஜையில் கொட்டி சீட் கேட்ட திமுக பிரமுகர்
ரூ20 லட்சத்தை மேஜையில் கொட்டி சீட் கேட்ட திமுக பிரமுகர்
திருப்பத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் 3 பேரூராட்சிகளிலும் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிட தி.மு.க. சார்பில் 154 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. சார்பில் நேர்காணல் திருப்பத்தூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ., நல்லதம்பி எம்.எல்.ஏ., நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.
நேர்காணலில் கலந்து கொண்ட தி.மு.க.வினரிடம் எந்த வார்டில் போட்டியிடுகிறீர்கள்?, எவ்வளவு செலவு செய்ய முடியும்?, வகிக்கும் பதவிகள் என்ன? என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
நேர்காணலில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் திடீரென ரூ.20 லட்சத்தை மேஜையில் கொட்டி சீட் வழங்குமாறு கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் உடனடியாக பணத்தை எடுத்து உள்ளே வையுங்கள் என கூறி நேர்காணலை முடித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story