முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம்


முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:05 PM GMT (Updated: 29 Jan 2022 5:05 PM GMT)

முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம்

திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வார்டு பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாகப் பேசி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. தி.மு.க. திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், செய்தி துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
வார்டு பங்கீடு
திருப்பூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் வார்டு பங்கீடு தொடர்பாக ஆலோசித்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வார்டு பங்கீடு செய்யப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க., ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

Next Story